மஹாராஷ்டிராவில் உணவின்றி சிக்கி தவிக்கும் இளைஞர்கள்..! தமிழ்நாடு அரசு உதவ கோரிக்கை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


தமிழகத்தை சேர்ந்த 200 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். எவாட்மால் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் திருவாரூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200 பேர் பணியாற்றி வந்தனர். நேரடியாக இயற்கை பொருட்களை விற்பது தான் அவர்களின் வேலையாகும். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அவர்கள் அங்கு சென்று பணியாற்றி கொண்டிருந்தனர்.

 

அவர்கள் அங்கிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.144 தடை உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் தங்கள் வெளியே செல்ல முடியாமலும் சாப்பாட்டிற்கு கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அந்த வீடியோவில் தாங்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவதாக கூறியுள்ளனர்.

 

அதற்காக தமிழ்நாடு அரசு தங்களுக்கு முன்னுரிமை கொடுத்து உதவ வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். கொரொனா தாக்கம் காரணமாக பேருந்து மற்றும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் சொந்த ஊர்களுக்கு வரமுடியாமல் அங்கு 200 தமிழர்கள் தவிர்த்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் அதிக பாதிப்புகளை சந்தித்து வருவதால் அங்குள்ள தமிழர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

 

தமிழகம் செல்லுமாறு அங்குள்ள மக்கள் நெருக்கடி கொடுப்பதாகவும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply