--- --:--:-- --

கதவை பூட்டி உள்பக்கம் பணியாற்றிய ஐ‌டி ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

9

கரூரில் 144 தடை உத்தரவை மீறி செயல்பட்ட ஐடி நிறுவனத்தில் பணியாற்றி 21 ஊழியர்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். கரூர் நகராட்சிக்கு உட்பட்ட தான்தோன்றிமலை பகுதியில் 20 க்கும் மேற்பட்டவர்களோடு ஐடி நிறுவனம் செயல்பட்டு வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் அங்கு சென்றபோது நிறுவனத்தின் ஊழியர்கள் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு பணியாற்றுவதும் தெரியவந்துள்ளது.

 

இதனையடுத்து கதவை அதிரடியாக திறக்க வைத்து அதிகாரிகள் ஊழியர்கள் அனைவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இனி இதுபோன்று நடைபெறாது என்று மேலாளர் ராஜா பாண்டியனிடம் அதிகாரிகள் எழுதி வாங்கிக் கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon