--- --:--:-- --

கொரானா பீதியால் பயணத்தை தவிர்க்கும் மக்கள்..!168 ரயில்கள் ரத்து..! முன்பதிவை கேன்சல் செய்தால் அபராதம் இல்லை என ரயில்வே அறிவிப்பு!!

1

கொரானா வைரஸ் பீதியால், வெளியூர் பயணங்களை மக்கள் தவிர்த்து வருவதால் நாடு முழுவதும் 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏற்கனவே முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை , ரத்து செய்தால் அபராத கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் ரயில்வே அறிவித்துள்ளது.

 

கொரானா பரவலை தடுக்கும் ஒரே வழி, பொது இடங்களி கூடுவதை தவிர்க்க வேண்டும். வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்பதே இப்போதைக்கு ஒரே தீர்வாக தெரிய வந்துள்ளது.
இதனால் மத்திய, மாநில அரசுகள் மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக நாடு முழுவதும் பொது வெளியில் நடமாடுவதையும், வெளியூர் பயணம் மேற்கொள்வதையும் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து தவிர்க்க தொடங்கியுள்ளனர்.

 

இதன் காரணமாக நாடு முழுவதுமே முக்கிய இடங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. பொதுமக்களும் பயணங்களை தவிர்ப்பதால், விமானம், பேருந்து, ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. பயணிகள் குறைவால் இன்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் நாடு முழுவதும் 168 ரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

 

பயணிகள் குறைவால் ரத்து செய்யப்படும் ரயில்களில், ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு முழு கட்டணமும் திரும்ப வழங்கப்படும் எனவும் அடுத்து வரும் நாட்களுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களும் தங்கள் பயணத்தை ரத்து செய்தால் அவர்களுக்கும் அபராத கட்டணமின்றி முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் எனவும் ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon