--- --:--:-- --

ராஜ்யசபா எம்.பி.,யாக ரஞ்சன் கோகாய் பதவியேற்பு..! எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கூச்சல், வெளிநடப்பு!!

4

ராஜ்யசபா எம்.பி.யாக மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இன்று பதவியேற்றார். ராஜ்யசபாவில் அவர் பதவியேற்ற போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதுடன் வெளிநடப்பிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்பது.

 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ரஞ்சன் கோகாய்க்கு நியமன எம்.பி பதவி வழங்கியது மத்திய அரசு .தலைமை நீதிபதி பெறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற நான்கு மாதங்களிலேயே நியமன எம்.பி.பதவி வழங்கியது பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. இந்த நியமனம் நீதித்துறையின் மாண்பை குலைப்பதாகவும், தவறான முன்னுதாரணம் என 9ம் குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள், ராஜ்யசபா எம்.பி பதவியை கோகாய் ஏற்கக் கூடாது எனவும் வலியுறுத்தின. ஆனால், இவையெல்லாம் பொருட்படுத்தாத ரஞ்சன் கோகாய் எம்.பி.யாக பதவி ஏற்கப் போவதாகவும் அதன்பின் தம் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மாநிலங்களவை கூடியவுடன் முதல் நிகழ்ச்சியாக ரஞ்சன் கோகாய் எம்பி பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது,ரஞ்சன் கோகாய் பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள், வெட்கம்.. வெட்கம்.. என கூச்சலிட்டனர். பின்னர் பதவி ஏற்பை புறக்கணித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் மாநிலங்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Right Menu Icon