அனல்மின் நிருவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..! இராமநாதபுரம் அருகே பரபரப்பு!!
இராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் கடற்கரை பகுதியில் அனல் மின்நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையிலும் கட்டுமான பணி தொடர்ந்து நடந்து வந்தது. இந்த நிலையில், இன்று லாரிகள் மூலம் சவடு மண் கொண்டு வந்து கடல் பகுதியில் கொட்டுவதற்கு அனல் மின் நிலைய நிர்வாகம் முயன்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவடு மண் ஏற்றி வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். ஏராளமான பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட நிலையில் பள்ளி மணவ, மாணவிகளையும் கடும் வெயிலில் மறியலில் ஈடுபடுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆர்எஸ் மங்கலம் தாசில்தார் சாந்தி மற்றும் திருவாடானை காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, நீதிமன்றத்தில் 20 நாட்களுக்குள் ஸ்டே வாங்கி கொள்ளுங்கள், அதுவரை எவ்வித பணிகளும் நடைபெறாது என்று முடிவு செயயப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகள் இன்று பள்ளிக்கு செல்லவில்லை. 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், 300க்கும் .அதிகமான பெண்கள் மறியலில் கலந்து கொண்டார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




