குழந்தையை திருட முயன்ற நபருக்கு தர்ம அடி

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தடரப்பட்டு கிராமத்தில் கவரிங் நகையை விற்பது போல வந்து குழந்தையை திருட முயன்ற நபரை கிராம மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

 

திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசா என்பவர் கவரிங் நகையை விற்பது போல நடித்து 4 வயது குழந்தைக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்து தூக்கி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது .இதனை கண்ட பொதுமக்கள் குழந்தையை மீட்டு அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

 

இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் தர்ம அடி கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply