சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது தடுப்புகளை தாண்டி மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ஒருவர் மகேந்திர சிங் தோனியின் காலில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐபிஎல் தொடரை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பயிற்சியை காண வந்த ரசிகர் ஒருவர் தடுப்புகளை தாண்டி சென்று தோனியின் கால்களை பற்றிக்கொண்டார். பாதுகாவலர்கள் அந்த ரசிகர்களை அப்புறப்படுத்தி அழைத்து சென்றனர்.