--- --:--:-- --

காஞ்சிபுர பொறியாளர் தவிர மற்றவருக்கு தொற்று இல்லை!

12

கொரொனா பாதிப்பால் காஞ்சிபுரம் பொறியாளரோடு பழகிய ஏழு பேர் உள்ளிட்ட எட்டு பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

ஓமனில் இருந்து தாயகம் திரும்பிய காஞ்சிபுரத்தை சேர்ந்த பொறியாளருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

அவருடன் பழகிய ஏழு பேர் உள்ளிட்ட எட்டு பேருக்கு மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் அவர்களில் யாருக்கும் கொரொனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் ஒருவரை தவிர வேறு யாருக்கும் பாதிப்பு இல்லை என உறுதியாக இருப்பதாகவும் அதே சமயம் தீவிர கண்காணிப்பு தொடர்வதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon