ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்த பெண்… பதைபதைக்கும் காட்சி!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பவானிசாகரை சேர்ந்த முத்தம்மாள் என்பவர் கடந்த மாதம் 26ஆம் தேதி தனியார் பேருந்து ஒன்றில் நின்றபடியே பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது தனக்கு முன் பக்கம் இருந்த இருக்கையில் அமர முத்தம்மாள் அங்கிருந்து நடந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் பேருந்து வளைவு ஒன்றில் வளைந்து உள்ளது. இதனால் கம்பியின் பிடிமானத்தை மொத்தமாக பிடிக்க முடியாமல் போனதால் பேருந்தின் முன்பக்க படிக்கட்டு வழியாக கீழே விழுந்து தலையில் அடிபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஓடும் பேருந்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறினால் என்ன மாதிரியான விபரீத நேரிடும் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




