கை மாறும் பண புழக்கத்தால் கொரோனா பரவுமா?
கைக்குக் கைமாறும் பணத்தால் கொரொனா வைரஸ் பரவுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. தொற்று நோய் பெரும்பாலும் சளி, இருமல், தும்மல் வழியாக பரவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் முக கவசங்களுக்கு உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் கைகள் வழியாகத்தான் தொற்று பரவுகிறது என்பதால் கைகளை அடிக்கடி சுத்தமாகக் கழுவ மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதேபோன்று நியூயார்க் பல்கலைகழகம் 2014ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் 3 ஆயிரம் வகையான பாக்டீரியாக்கள் டாலர் நோட்டுகளில் படர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரொனா பீதி பரவிய நிலையில் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி ஆசியாவில் இருந்து பெறப்படும் டாலர் நோட்டுகளை தனியாக வைத்து அவற்றை சோதித்த பின்னரே மறுசுழற்சிக்கு வெளியே விடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக சுகாதார அமைப்பும் இது குறித்து எச்சரிக்கை எதையும் விடுக்கவில்லை என்றபோதும் வங்கிகளிலிருந்து ரொக்கப் பணத்தை கையாளும் போது கைகளை கழுவிக் கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




