மசூதியில் பெட்ரோல் குண்டு வீச்சு.காவல் துறையினர் விசாரணை ?கோவையில் பரபரப்பு!!!
கோவை கணபதி ரூட்ஸ் கம்பெனி எதிரில் உள்ள வேதாம்பாள் நகர் பகுதியில் பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளிவாசல் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று இரவு ஒரு மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.இச்சம்பவம் குறித்து அறிந்த சரவணம்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்,அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவத்தால் யாருக்கும் எந்த வித பாதிப்புமில்லை.

மேலும்,நேற்று இரவு இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ஆனந்த் என்பவர் தாக்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடைபெற்ற நிலையில் இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




