--- --:--:-- --

கரும்பு தொழிலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் அதிகாரி

8

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வெளியூரிலிருந்து வந்த கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளர்களை எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி ஒருவர் ஆபாசமாக வசை பாடி கொலை மிரட்டல் விடுப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

 

ஆண்டிபாளையம் பகுதியில் வெட்டப்படும் கரும்புகள் சேத்தியாத்தோப்பில் உள்ள எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கொண்டுபோவது வழக்கம். இந்தநிலையில் கள்ளகுறிச்சி பகுதியிலிருந்து வந்த சில கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் தங்கள் பகுதிக்கு கரும்புகளை ஏற்றிச் செல்ல அங்கு வந்துள்ளனர்.

 

இதனால் ஆத்திரமடைந்த எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலை சோழ மண்டல அலுவலர் துரை என்பவர் அவர்களை வெளியேறுமாறு ஆபாசமான வார்த்தைகளால் வசை பாடி கொலை மிரட்டல் விடுப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon