சேலை அணிந்து கொண்டு கிரிக்கெட் விளையாடும் மிதாலி ராஜ்
இந்திய மகளிர் அணி கிரிக்கெட் அணியின் முன்னாள் மிதாலிராஜ் சேலை அணிந்து இந்திய கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தனக்கென தனி இடம் பிடித்த மிதாலி ராஜ் கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் அடுத்தாண்டு நடைபெற உள்ள மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக தயாராகி வருகிறார்.
இந்நிலையில் கிரிக்கெட் உபகரண கவசங்கள் சகிதமாக பாரம்பரிய உடையான சேலை அணிந்து கொண்டு மிதாலிராஜ் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட அந்த வீடியோவை மகளிர் தினத்தை முன்னிட்டு தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




