மாசில்லா சூழலை உருவாக்க மாட்டு வண்டியில் சென்ற மணமக்கள்

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் விதமாக ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமக்கள் இருவரும் பெட்ரோல் டீசல் வாகனங்களை தவிர்த்து மாட்டு வண்டியில் பயணம் செய்தனர்.

 

கருங்கல் பகுதியில் பரணி பிரகாஷ் மற்றும் சுபாஷினி இளைஞருக்கு திருமணம் நடைபெற்றது. பாரம்பரியத்தை விரும்பிய மணமக்கள் இருவரும் மாசில்லா சுற்றுச் சூழலை உருவாக்கும் விதமாக முருகன் கோவிலில் இருந்து திருமண மண்டபம் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாட்டு வண்டியில் பயணம் செய்தனர்.

 

மணமக்களின் இந்த செயல் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.


Leave a Reply