--- --:--:-- --

ஜெயலலிதாவாக மாற உடல் எடையை அதிகரிக்கும் கங்கனா

10

ஜெயலலிதா பாத்திரத்தில் நடிப்பதற்காக தலைவி படத்தின் நாயகி கங்கனா தனது உடல் எடையை 20 கிலோ கூட்டியுள்ளார். ஏஎல் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி வரும் தலைவி படம் வரும் ஜூன் 26-ம் தேதி வெளியாகிறது.

 

இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ஜெயலலிதா பாத்திரத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகை கங்கனா அரசியல் பிரவேசத்திற்கு பின்னான ஜெயலலிதாவின் தோற்றத்தில் திரையில் தோன்றுவதற்காக உடல் எடையை அதிகரித்து வருகிறார்.

 

அவரது பயிற்சியாளர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் 70 கிலோ அளவுக்கு உடல் எடை கூடியுள்ளது. தலைவி படத்தை தொடர்ந்து தேசிஸ்தன் படத்தில் விமானியாகவும், மற்றொரு படத்தில் சண்டை பயிற்சியாளராகவும் நடிக்கவுள்ள கங்கனா இரண்டு மாதங்களுக்கு பின்னர் எடையை குறைக்க உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon