பார்வையாளரை கடித்துக் குதறிய புலி!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பெர்சாமுண்டா தாவரவியல் வனவிலங்கு பூங்காவில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஒருவரை பெண்புலி பாய்ந்து கடித்து குதறியதில் அவர் உயிரிழந்தார். அனுஷ்கா என்ற 9 வயதேயான பெண்புலி பசிமன்சாரி என்ற சுற்றுலா பயணி மீது பாய்ந்தது.

 

இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். புலியிடமிருந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய போதும் அவர் உயிரிழந்துவிட்டார். தடுப்பை தாண்டி அவர் புலியின் இருப்பிடம் அருகே சென்றதால் இந்த கொடூர சம்பவம் நடந்ததாக பூங்கா இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.


Leave a Reply