--- --:--:-- --

விடிந்தால் திருமணம்! இரவில் மாப்பிள்ளையை கொலை செய்த மைத்துனர்!

8

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நாளை திருமணம் நடைபெறவிருந்த புது மாப்பிள்ளையை படுகொலை செய்ததாக மைத்துனர் கைது செய்யப்பட்டார். தென்மலை இந்திரா காலனியை சேர்ந்தவர் முனியப்பன். ஜேசிபி ஆபரேட்டராக பணிபுரிந்த இவருக்கு நாளை காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

 

இதையொட்டி வீட்டின் முன் பந்தல் அலங்காரம் செய்து உறவினர்களும் குழுமியிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் முனியப்பன் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

 

போலீசார் விசாரணையில் நள்ளிரவில் முனியப்பனுக்கும், தங்கை கணவர் வீரசங்கிலி முருகனுக்கும் தகராறு ஏற்பட்டு அவரை முனியப்பன் தாக்கியதாகவும் இதில் ஆத்திரம் அடைந்த சங்கிலி முருகன் மதுபோதையில் நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பிறகு வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த முனியப்பனை கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

 

இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon