--- --:--:-- --

ஸ்ரீதேவியின் நினைவு நாள்… நடிகர் அஜித் பங்கேற்பு…

14

சென்னையில் நடைபெற்ற மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டார். 2018 ஆம் ஆண்டு காலமான நடிகை ஸ்ரீதேவி இரண்டாம் ஆண்டு நினைவுநாள் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி அனுசரிக்கப்பட்டது.

 

இந்நிலையில் சென்னை சிஐடி நகரில் ஸ்ரீதேவிக்கு இரண்டாம் ஆண்டு திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் நடிகர் அஜித் குமாரும் கலந்துகொண்டார்.

 

ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தில் நடித்திருந்த அஜித் குமார் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வரும் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon