தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை..!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் கோவை, திண்டுக்கல், நீலகிரி, தேனி, திருப்பூர், மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஏனைய பகுதிகள் புதுவை மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் குமரி மாவட்டம் பெருஞ்சுனை மற்றும் புத்தன் அணை பகுதியில் தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


Leave a Reply