+2 மாணவனை தேர்வறையில் டர்பனை கழற்ற சொன்ன தேர்வாளர்!
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலையில் கட்டியிருந்த டர்பனை அவிழ்த்து சோதனை நடத்தியதாக தேர்வு அலுவலர்கள் மீது சீக்கிய மாணவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். தேர்வாளரின் நடவடிக்கை மத நம்பிக்கைக்கு எதிரானதாகும் என்று அந்த மாணவர் தெரிவித்தார். மாணவரின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பேசிய மாவட்ட கல்வி அலுவலர் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




