--- --:--:-- --

மாஸ்டர் VS சூரரைப் போற்று..ரிலீஸ் தேதி கன்ப்யூசன்

7

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தோடு நேரடியாக மோதுவதை தவிர்க்கும் விதமாக நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்பட ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சுதா, கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூரரைப்போற்று திரைப்படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் விஜய்யும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கும் மாஸ்டர் திரைப்படமும் அதே தேதியில் ரிலீஸ் ஆக இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

இதனால் சூரரைப்போற்று பட ரிலீஸ் தேதியை ஏப்ரல் 14 அல்லது மே 1ஆம் தேதிக்கு தள்ளி வைக்க அந்த படக்குழு யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon