டெல்லி வன்முறையில் தந்தையை காணவில்லை..கருகிய கால் தந்தையுடையதா? தெரியாமல் துடிக்கும் பெண்!
வட கிழக்கு டெல்லி வன்முறையின்போது எரிக்கப்பட்டு கிடந்த ஒரு உடலில் எஞ்சிய பாகத்தை வைத்து அது தனது தந்தையுடயதா என அடையாளம் காண இஸ்லாமிய பெண் ஒருவர் காத்துக் கொண்டு உள்ளார். உதவிக்காக பார்வை மாற்றுத்திறனாளி கணவரை அழைத்து வந்துள்ளார் அந்த பெண். வட கிழக்கு டெல்லியில் வசித்து வருபவர் இளம்பெண் குல்ஷன்.
கணவர் முகமது நஸ்ருதீன் இவர் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இந்நிலையில் ஆடு விற்பனை செய்யும் 61 வயதான தந்தை அன்வரின் வருமானத்தை நம்பி இந்த இளம் தம்பதி காலத்தை ஓட்டி வந்தது .கடந்தவாரம் டெல்லியை கலவர பூமியாக மாற்றிய சம்பவம் குடும்பத்தை நிர்க்கதியாகி சென்றது. வன்முறையின்போது தொழிலுக்கு சென்ற தந்தை வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து வன்முறை வெறியாட்டம் ஓய்ந்த பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிந்தது. அவர்கள் டெல்லி மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் போய் பார்க்குமாறு போலீசார் கூறியுள்ளனர். அங்கு சென்றபோது ஒரு கால் மட்டும் எஞ்சிய நிலையில் மற்றவையும் முற்றிலும் எரிந்த உடலை உனக்கு காட்டியுள்ளனர்.

காலை மட்டும் வைத்து அந்த உடல் தனது தந்தையுடயதா என அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டதால் டிஎன்ஏ பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
டெல்லி மருத்துவமனை சவக்கிடங்கில் வெளியே டிஎன்ஏ பரிசோதனை முடிவுக்காக கடந்த 29ஆம் தேதி முதல் பார்வை மாற்றுத்திறனாளி கணவனுடன் இருக்கிறார் .அந்த ஒற்றைக் காலுடன் தனது தந்தையுடயதா ? இல்லையா ? என்ற முடிவு எதுவாக இருந்தாலும் இந்த இளம் தம்பதிக்கு இனி யார் ஆதரவு.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




