பைக் மீது கார் ஒன்று நேருக்கு நேர் மோதும் சிசிடிவி காட்சி
சென்னை அம்பத்தூரில் இருசக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று நேருக்கு நேர் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருவேற்காடு பாலாஜி நகரை சேர்ந்த தீபக், ஆனந்த் ஆகியோர் இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் அயப்பாக்கம் வழியாக திருவேற்காடு சென்றனர்.
அப்போது திருவேற்காடு பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த கார் ஒன்று நேருக்கு நேர் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.





