விமான பயணிகளின் வைஃபை கனவு நினைவாக போது..
விமானத்தில் பறக்கும் போது wi-fi தொடர்பு கிடைக்குமா என்ற இந்திய விமான பயணிகளின் நீண்ட நாள் கனவு விரைவில் நனவாகப் போகிறது. பறக்கும் போது இணைய தொடர்புக்கு இருக்கும் தடையை விலக்க விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி பயணிகள் விமானத்தில் பறக்கும் போது தங்களது செல்போன் , லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவைகளை ஃப்ளைட் மூடில் வைத்த பிறகு அவற்றுக்கு வை-பை இணைப்பு வழங்கப்படும். இதற்காக குறிப்பிட்ட விமானத்தில் வைஃபை சேவை அளிக்கலாம் என்று விமான போக்குவரத்து தலைமை இயக்குனர் சான்றளிக்க வேண்டும்.
உள்நாட்டு விமானங்களில் வை-ஃபை வசதி இல்லாத நிலையில் இந்திய வான் எல்லைக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு விமானங்கள் தங்களது வைஃபை இணைப்பினை துண்டிக்கும் நிலை தற்போது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




