உத்திரபிரதேசத்தில் பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மீரட் நகரில் மாகாண ஆயுதப் படையினர் நூற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் முகாமிட்டுள்ளனர்.
அவர்களில் 17 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டு உள்ளதால் அவர்களை தனிமைப்படுத்த குறிப்பிட்ட வீரர்கள் வெளியே செல்லவும் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மீரட் நகரில் மட்டும் இதுவரை 78 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் நிலைமைகளை சமாளிக்க மருத்துவமனைகளுக்கு போதுமான அளவு மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நிலைமை குறித்து அறிய அம்மாநில அரசு மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.