தமிழக கிராமங்களில் பெருகும் நீரிழிவு நோய்!
தமிழகத்தின் கிராமப்புறங்களில் அரிசி சாதத்தை அதிகளவில் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் உடலுழைப்பு இல்லாதவர்கள் மட்டுமே அதிகம் பாதித்து வந்த நீரிழிவு நோய் தற்போது கிராமப்புற மக்களையும் பதம் பார்த்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு கிராமத்தை சேர்ந்த சுற்றியுள்ள சுமார் 25 கிராமங்களில் வீடுவீடாகச் சென்று நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் நீரிழிவு நோயின் பாதிப்பு 4 சதவீதத்திலிருந்து 13.5 சதவீதமாக உயர்ந்து இருப்பதாக நீரிழிவு ஆராய்ச்சியாளர் அறக்கட்டளை மற்றும் ஸ்காட்லாந்தை சேர்ந்த தண்டி பல்கலைக்கழகம் ஆகியவை தெரிவித்துள்ளன.
காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிடவும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் நீரிழிவு நோயின் தாக்கத்திற்கு முக்கிய காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




