முதியவர் ஒருவர் உள்ளங்கையில் தண்ணீர் பிடித்து வந்து நாய் ஒன்றின் தாகம் தணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய வன அதிகாரி சுசாந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் முதியவர் ஒருவர் தெரு நாய் ஒன்றுக்கு உயரமாக அமைக்கப்பட்டுள்ள குழாயிலிருந்து உள்ளங்கையில் தண்ணீரை பிடித்து வந்து கொடுக்கிறார்.
அவற்றை தாகத்தில் இருந்த நாய் ஒரு நொடியில் குடித்து முடிக்க மீண்டும் குழாயிலிருந்து தண்ணீர் பிடித்து வரும் முதியவர் அதற்கு கனிவுடன் கொடுக்கிறார். வாயில்லா ஜீவனிடம் முதியவர் இரக்கம் காட்டும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள் :
கும்பமேளாவை நீட்டிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்
தனியார் பேருந்து ஓட்டுனர்களிடையே மோதல்..!
டெல்லியில் ஆட்சியை பிடித்ததும் பிரம்மாண்ட ஆர்எஸ்எஸ் அலுவலகம் திறப்பு..!
கல்யாண வீட்டு சாப்பாடு..மயங்கி விழுந்த 40 பேர்..!
ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய பருந்து..!
பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..!