ஆடம்பர வாழ்க்கைக்காக செல்போன் திருடிய மாணவன்..!
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சாலையோரம் நடந்து செல்வோரிடம் செல்போன்களை பறித்து விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்த கல்லூரி மாணவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். நன்மங்கலம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் நடந்து செல்லும் போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணையில் இறங்கிய போலீசார் ஜெய்சன், மகேஷ்,நரேஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர். இதில் நரேஷ்குமார் இந்துஸ்தான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி மாணவன் என்று கூறப்படுகிறது. இவர்களிடமிருந்து செல்போன்களை வாங்கி விற்ற சரவணன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
செல்போன்களை விற்று வரும் பணத்தில் கஞ்சா மற்றும் மது என உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இவர்களில் மகேஷ் வீடு வீடாக சென்று அலுமினிய குழாய்களை திருடும் நூதன பழக்கத்தை கொண்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள், 15 அலுமினிய குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




