--- --:--:-- --

தலைவி படத்தால் எனக்கு தான் அவமானம்..!

11.1

கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகும் தலைவி பட கதையை அடிப்படையாக கூறப்படும் நாவலை எழுதிய அஜயன் பாலா பாஸ்கரன் இயக்குனர் விஜய் தம்மை அவமானப்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

 

ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் திரைப்படத்துறையில் பலமுறை துரோகத்தை சந்தித்திருந்தாலும் தலைவி படம் மூலம் நேரிட்ட அவமானத்தை ஏற்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஆறு மாத காலம் ஆய்வு செய்து எழுதிக்கொடுத்த நாவலை நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற ஆதாரமாக பயன்படுத்திய பிறகு படத்தில் இருந்து தமது பெயரை நீக்கி விட்டதாகவும் திரைக்கதையின் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் சேர்க்கப்பட்ட காட்சிகளை நீக்க கூறியதே இதற்குக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

இதுகுறித்து இயக்குனர் விஜயின் பதிலை அறிய அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது பதில் கிடைக்கவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon