ஷாருக்கான் படத்தை புகழ்ந்த டிரம்ப்! நன்றி தெரிவித்த ரசிகர்கள்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் அகமதாபாத்தில் நிகழ்த்திய உரையின் போது பாலிவுட் திரைப்படங்கள் பற்றி பேசியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஷாருக்கான் நடித்த தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே, அமிதாப் தர்மேந்திரா நடித்த சோலை ஆகிய படங்களை பற்றி தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இந்தியா ஆண்டுதோறும் 2,000 திரைப்படங்களை தயாரிக்கிறது என்றும் படைப்பாற்றலும், மேதைகளும் நிறைந்தது பாலிவுட் உலகம் என்றும் அவர் கூறினார். பங்காரா நடனங்கள், இசை, காதல் காட்சிகள் போன்றவற்றால் தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே, ஷோலே போன்ற படங்கள் புகழ்பெற்று விளங்குவதாக குறிப்பிட்டார்.
இதற்கு நன்றி தெரிவித்து ஷாருக்கானின் ரசிகர்கள் டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




