லைகா நிறுவனத்திற்கு கமல்ஹாசன் கடிதம்!
படப்பிடிப்பு தளத்தில் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என லைக்கா நிறுவனத்திற்கு நடிகர் கமலஹாசன் கடிதம் எழுதியுள்ளார். சென்னை பூந்தமல்லியில் ஈவிபி பிலிம் செட்டில் நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பின்போது கிரேன் கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து தமிழ் சினிமா உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நடிகர் கமல் லைகா நிறுவனத்தின் நிறுவனர் பாஸ்கரனுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் படப்பிடிப்பு தளங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் காப்பீடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படப்பிடிப்பு தளத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்த ஆய்வை தயாரிப்பு நிறுவனம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நடிகர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




