--- --:--:-- --

திருப்பூா், திருஅவினங்குடி கருமாரியம்மன் கோயிலில் மாசிமாத திருவிழா: பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

6e7f2266-e0fc-41a0-89f7-313e4be694b6

திருப்பூர் மாவட்டம், சிறுபூலுவபட்டி திருஅவினங்குடி நகரில்  பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் திருக்கோயில் அமைந்து உள்ளது. இக்கோயிலுக்கு ஆண்டுத்தோறும் மாசி மாதத்தில் பக்தர்கள் பால்குடம் எடுப்பது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டுக்கான மாசி மாத திருவிழா இன்று நடைபெற்றது.

 

இதையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து, மேள தாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் 15,வேலம்பாளையம், சிறுபூலுவபட்டி, திருஅவினங்குடி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து   திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கருமாரியம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர்.

 

முன்னதாக கோயிலில் உள்ள ஸ்ரீ ஆனந்தவிநாயகர், ஸ்ரீ கருப்பண்ண சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon