--- --:--:-- --

ஹஜ் பயணம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

2

தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் அனுமதி அளிக்க கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

அந்தக் கடிதத்தில் தமிழகத்தில் இருந்து 3 ஆயிரத்து 736 பேர் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள இந்திய ஹஜ் கமிட்டி அனுமதி வழங்கியிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கும் முதலமைச்சர், ஆனால் 2020 ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தமிழகத்திலிருந்து 7 குழந்தைகள் உட்பட 6,028 பேர் விண்ணப்பம் செய்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

பல மாநிலங்களில் ஹஜ் பயணம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவான மக்களே விண்ணப்பம் செய்திருக்கும் நிலையில் மீதமுள்ள இடங்களை தமிழகத்திலிருந்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு வழங்க மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறைக்கு அறிவுறுத்துமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon