--- --:--:-- --

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்திற்கு ஸ்டாலின் திட்டம்

9

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அடுத்த மாத இறுதியில் தனது சுற்றுப்பயணத்தை திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வரும் மார்ச் 29ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பயணம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் “நமக்கு நாமே” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதற்கு முன்பாக காவிரி மீட்பு பயணம், கிராமசபை கூட்டங்கள் என மேற்கொண்டு இருந்தாலும் வரவுள்ள தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் மீண்டும் அரசியல் பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதற்காக குறைந்தது பத்து அம்சத் திட்டங்களுடன் திமுக மக்களை எதிர்கொள்ள அரசியல் வியூகம் வகுத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon