--- --:--:-- --

சர்ச்சையில் சிக்கியுள்ள மாஃபியா திரைப்படம்

8.1

துருவங்கள் 16 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். தற்போது குறியீடு சிக்கலில் சிக்கியுள்ளார். மாபியா படத்தில் கதாநாயகனாக அருண்விஜய் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு எதிராக போதைப் பொருள் கடத்தும் மாபியா கும்பல் தலைவனாக பிரசன்னா நடித்திருக்கிறார்.

 

தற்போதெல்லாம் திரைப்படங்களில் இயக்குனர்கள் சொல்லாமல் சொல்லியிருக்கும் குறியீடுகளை சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் கண்டுபிடித்து விவாதித்து வரும் சூழல் அதிகரித்து வருகின்றன. உண்மையில் அது இயக்குனர்களால் யோசித்து வைக்கப்பட்டதா இல்லை எதேச்சையாக நிகழ்ந்தவற்றை ரசிகர்கள் குறியீடு என ஊதிப் பெரிதாக்கிகிறார்களா என தனியாக ஒரு விவாதமே நடந்து வருகிறது.

 

இந்தநிலையில் மாபியா படத்தில் ஹீரோவாக வரும் அருண் விஜய்யின் பெயர் ஆரியன். வில்லனாக வரும் பிரசன்னாவின் பெயர் திவாகர் குமரன். சுருக்கமாக டி‌கே என படம் முழுக்க அழைக்கப்படுகிறார். இதை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட ரசிகர்கள் ஆரியன் என்றால் ஆரியஇனத்தையும், டி‌கே என்றால் திராவிடர் கழகத்தையும் குறிப்பதாக ஆரிய-திராவிட சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளனர்.

இது ஒரு பக்கமிருக்க கார்த்திக் நரேன் அம்பேத்கரை சீண்டியுள்ளதாக ஒரு தரப்பினர் சமூகவலைத்தளத்தில் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். அதாவது இந்த படத்தில் வரும் மாபியா கும்பல் ஒன்று தங்களது போதைப்பொருட்களை இரகசியமான குடோனில் பதுக்கி வைத்திருப்பது போல் இயக்குனர் கார்த்திக் நரேன் காட்சிப்படுத்தி இருப்பார்.

 

அந்தக் காட்சிகளை எடுத்து ஆராய்ந்து உள்ள சமூக வலைதள வாசிகள் மாஃபியா கும்பலின் குடோன் சேரிப் பகுதிகளில் அமைக்கப்பட்டு இருப்பது போலவும் போதை கடத்தல் ஈடுபட்டவர்களின் அடியாட்களாக அனைவரும் நபர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை பிரதிபலிப்பது போல் இருப்பதாகவும் குண்டை தூக்கி போட்டுள்ளனர்.

 

மேலும் மாபியா கும்பல் செயல்படும் குடோனில் சுற்றுச்சுவரில் கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய் என்ற வாசகங்களுடன் அம்பேத்கர் இருப்பதுபோல் காட்சிப்படுத்தி இருப்பது அம்பேத்கரை இழிவு படுத்துவதாக அமைந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். இவை அனைத்தும் கார்த்திக் நரேன் வேண்டுமென்றே குறியீடாக பயன்படுத்தி அரசியல் பேசி இருப்பதாகவும் சமூகவலைதளங்களில் தீவிர விவாதங்கள் எழுந்து வருகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon