--- --:--:-- --

தாஜ்மகால் கட்டப்பட்ட பின் முதன் முறையாக… ஷாஜஹான், மும்தாஜ் கல்லறைகள் சுத்தம் செய்யப்பட்டு “பளிச்”! டிரம்ப் வருகை தான் காரணம்!!

c8159a3f-cb0e-45c7-aff1-6cb87cbc18ab

உலக அதிசயமான தாஜ்மகால் கட்டப்பட்டு 370 ஆண்டுகள் முடிந்த நிலையில், உள்ளே அமைந்துள்ள ஷாஜஹான், மும்தாஜ் ஆகியோரின் கல்லறைகள் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு முதன் முறையாக சுத்தப்படுத்தப்பட்டு மெருகூட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

உலகின் அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்வது தாஜ் மஹால். முழுக்க வெண்பளிங்கு கற்களால் ஆன இந்த தாஜ்மகால், காதலின் சின்னமாக போற்றப்படுகிறது. முகலாய மன்னன் ஷாஜஹான், தனது காதல் மனைவியின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட சோகத்தை மறைக்க அழகிய இந்த தாஜ்மஹாலை பார்த்து பார்த்து அழகிய கலைநயத்தோடு உருவாக்கினார்.

 

இதனை கட்டி முடிக்க 30 ஆண்டுகள் ஆனது. 1653 -ல் கட்டி முடிக்கப்பட்ட தாஜ்மகால் போன்ற ஒரு ஓவியத்தை இப்போது நினைத்தாலும் கூட யாராலும் செதுக்கி விட முடியாது. அவ்வளவு நுணுக்கமாக, கலை நயத்தோடு செதுக்கப்பட்ட தாஜ்மகாலை பார்த்து பார்த்து இப்போதும் கோடிக்கணக்கானோர் மெய்சிலிர்க்கின்றனர்.

 

இந்த தாஜ்மகாலுக்குள்ளே தான் இதனை எழும்பிய மன்னன் ஷாஜஹான் அவருடைய காதல் மனைவி மும்தாஜ் ஆகியோரின் கல்லறைகளும் அமைந்துள்ளன. இவைகளும் மிகப் பிரம்மாண்ட அளவில் பளிங்குக் கற்களாலேயே செதுக்கப்பட்டுள்ளன. இந்த கல்லறைகளும் ஆச்சர்யமான அதிசயங்களாகத்தான் திகழ்கின்றன.

இப்படி வெள்ளை வெளேரென அழகுற மிளிரும் தாஜ்மகால் கட்டப்பட்டு கிட்டத்தட்ட 370 ஆண்டுகள் ஆகி விட்டாலும் அதன் பொலிவு மங்காமல் இருக்க காரணம் பளிங்கு கற்கள் தான் காரணம். இருந்தாலும் தாஜ்மகால் கட்டப்பட்ட இத்தனை ஆண்டுகளில், இதுவரை ஐந்தே முறை மட்டுமே அதனை சுத்தப்படுத்தியதாக சான்றுகள் கூறுகின்றன. தாஜ்மகாலை இப்படி 5 முறை சுத்தப்படுத்திய போதும், உள்ளே அமைந்துள்ள ஷாஜஹான், மும்தாஜ் ஆகியோரின் கல்லறைகள் இதுவரை ஒரு முறை கூட சுத்தப்படுத்தப்படவில்லையாம்.

 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகையை முன்னிட்டு முதல் முறையாக இந்த இரு கல்லறைகளும் சுத்தப்படுத்தப்பட்டனவாம்.விசேஷ களிமண் கொண்டு பூசி, தூய்மையான தண்ணீரை பீய்ச்சியடித்து கல்லறையை சுத்தம் செய்துள்ளனர். அது மட்டுமின்றி கல்லறை மேல் தொங்கும் சாண்ட்லியர்களும் இதே போன்று சுத்தம் செய்து பளிச் ஆக்கப்பட்டனவாம்.

 

இப்படி தாஜ்மகால் சரித்திரத்தில் முதன் முறையாக, டிரம்ப் வருகையை முன்னிட்டு இந்த இரு கல்லறைகளும் சுத்தம் செய்யப்பட்டாலும், நேற்று தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க வந்த டிரம்ப்போ இந்த கல்லறைகள் இருந்த பகுதிப் பக்கமே செல்லவில்லை என்பது கூடுதல் தகவல்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon