தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய இயக்குனர் மிஷ்கின்!
பாரம் திரைப்படத்திற்காக இயக்குனர் மிஷ்கின் சுவரொட்டி ஓட்டியுள்ளார். பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் பாரம். முதியோர் கருணை கொலை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றிருந்தது.
அண்மையில் படத்தின் செய்தியாளர் சங்கத்தில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் மிஷ்கின் பாரம் போன்ற சமூக கருத்துள்ள திரைப்படம் ஒன்றிற்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஓட்டுவதற்கு கூட தாம் தயாராக இருப்பதாக பேசியிருந்தார். இந்த நிலையில் பாரம் திரைப்படம் நேற்று திரைக்கு வந்த நிலையில், இயக்குனர் மிஷ்கின் சென்னையில் வாரம் படத்தின் சுவரொட்டி ஒன்றை ஒட்டி இருந்தார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசியதோடு மட்டுமில்லாமல் தெருவில் இறங்கி சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ள மிஷ்கினின் செயலைப் பாராட்டி மிஷ்கின் சுவரொட்டி ஒட்டும் புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




