--- --:--:-- --

2020 கிலோ கேக்கில் அப்துல்கலாம் உருவம்

14

சென்னை அடுத்த பூந்தமல்லியில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உருவம் இடம் பெற்ற 2020 கிலோ எடையிலான கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. அப்துல்கலாமின் 2020இல் இந்தியா வல்லரசாகும் என்ற கருத்தை குறிக்கும் வகையில் காட்டுப்பாக்கத்தை சேர்ந்த தனியார் கேக் தயாரிப்பு நிறுவனம் இந்த முயற்சியில் ஈடுபட்டது. இதற்காக 500 கிலோ மைதா, 650 கிலோ சர்க்கரை மற்றும் 16 ஆயிரம் முட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon