மாணவிகள் அறையில் நாள் முழுவதும் தங்கியிருந்த மாணவர்!
ஆந்திராவில் விடுதியில் மாணவிகள் அறையில் ஒருநாள் முழுவதும் தங்கி இருந்த மாணவரை பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்தனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் நூஜிவீடு அருகில் உள்ளது அரசு ஐஐடி. இங்கு 6000 மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் 6 மாணவிகள் தங்கியிருந்த விடுதி அறை ஒன்றில் ஆடவர் ஒருவர் தங்கியிருப்பதாக பேராசிரியர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
விடுதி அறையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த பாதுகாவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் அங்கு மாணவி ஒருவர் தனியாக இருப்பதை அறிந்தனர். விடுதி அறையில் இருந்த 6 கட்டில்களையும் ஒவ்வொன்றாக புரட்டிய பாதுகாவலர்கள் கட்டிலுக்கு அடியில் மாணவர் ஒருவர் பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை பிடித்த பாதுகாவலர்கள் மாணவரிடமும், மாணவியிடமும் விசாரணை நடத்தினர்.
பூட்டிய அறைக்குள் கையும் களவுமாக பிடிபட்ட மாணவி அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். விசாரணையில் மாணவி இரண்டாமாண்டு பிடெக் படித்து வருவதும் மாணவர் ஜன்னலை உடைத்து விடுதி அறைக்குள் நுழைந்ததும் தெரியவந்தது. மாணவரை சஸ்பெண்ட் செய்துள்ள ஐஐடி நிர்வாகம் இருவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




