இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை இந்தியா வருகிறார். தனது மனைவியுடன் தாஜ்மஹாலை ட்ரம்ப் சுத்தி பார்க்க இருப்பதால் ஆக்ரா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தாஜ்மஹால் செல்லும் சாலைகள் வண்ண விளக்குகளால் மின்னுகின்றன.
டிரம்பின் தாஜ்மகால் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி உடன் செல்ல மாட்டார் என்பது தெரியவந்துள்ளது. இதனிடைய அமெரிக்க அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை குஜராத்திற்கு வரவேற்கும் விதமாக சூரத் நகரில் 3டி முறையில் ரங்கோலிகோலம் வரையப்பட்டுள்ளது.
இதில் தலைவர்கள் இருவரது உருவமும் தத்ரூபமாக வரையப்பட்டிருப்பது பலரும் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.