இளைஞரை கட்டையால் தாக்கிய போக்குவரத்து காவலர்
சென்னையில் போக்குவரத்து காவலர் இளைஞரை கட்டையால் தாக்கிய சம்பவத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஓட்டேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த சுரேந்தர் என்பவரை மடக்கிப் பிடித்தார்.
தலைக்கவசம் அணியாமல் வந்ததால் அபராதம் விதிப்பதாக போக்குவரத்து காவலர் ரமேஷ் கூறிய போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. அப்போது அருகே இருந்த கட்டையால் சுரேந்தரை காவலர் ரமேஷ் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் படிந்த நிலையிலும் சுரேந்தர் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக காவலர் மற்றும் இளைஞர் தரப்பின் இடையே சமரசம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த சம்பவத்தின் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




