--- --:--:-- --

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு மார்ச் 3 இல் தூக்கு!

2

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்பயா குற்றவாளிகளான முகேஷ் குமார், பவன் குப்தா, வினய் குமார் ஷர்மா, அக்ஷய் குமார் ஆகிய நால்வரையும் கடந்த ஜனவரி 22ம் தேதி தூக்கிலிட முதன்முறையாக தேதி நிர்ணயிக்கப்பட்டது.

 

ஆனால் அடுத்தடுத்த கருணை மனு மற்றும் சீராய்வு மனுக்களை குற்றவாளிகள் ஒவ்வொருவராக தாக்கல் செய்த நிலையில், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதி பிப்ரவரி ஒன்றுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. எனினும் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் சீராய்வு மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

 

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய கொடூர குற்ற வழக்கில் தண்டனை தாமதமாவது குறித்து நிர்பயாவின் தாயும், மகளிர் அமைப்புகளும் அதிருப்தி தெரிவித்து இருந்தன. இந்நிலையில் 4 பேரையும் மார்ச் 3ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தர்மேந்திர ராணா திகார் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

 

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் வினய் சர்மா, அக்ஷய் தாகூர், முகேஷ், பவன் குப்தா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தூக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க ஒருவருக்கு 4, என மொத்தம் 16 வாய்ப்புகள் இருந்தன. அதில் தற்போது மொத்தமாக நான்கு வாய்ப்புகள் மட்டுமே மீதம் உள்ளன.

Leave a Reply

Right Menu Icon