--- --:--:-- --

என் டைவர்ஸ்க்கும் தனுஷுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல!

12

இயக்குனர் விஜய்யை நான் விவாகரத்து செய்வதற்கு நடிகர் தனுஷ் காரணம் அல்ல என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார். இயக்குனர் விஜய்யும், நடிகை அமலாபாலும் 2014ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்த நிலையில், இவர்களது உறவில் விரிசல் விழுந்து 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

 

விவாகரத்திற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என இயக்குனர் விஜய்யின் அப்பா ஏ எல் அழகப்பன் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக மனம் திறந்துள்ள அமலா பால் தனது விவாகரத்து முழுக்க முழுக்க தனது தனிப்பட்ட முடிவு என தெரிவித்துள்ளார்.

தனது நலம் விரும்பியான நடிகர் தனுசிற்க்கும் தனது வாழ்வாதாரத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon