ராணுவத்தில் ஆண்களைப் போலவே பெண் அதிகாரிகளை ஓய்வு வயது வரை பணியமர்த்தவும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் படைப்புகளுக்கான தலைமைப் பொறுப்புகளை வழங்குவதற்கும் பாலின அடிப்படையில் எவ்வித தடையும் இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சமூக நடைமுறைகள், உடலியல் சார்ந்த வரம்புகள், குடும்பக் கடமைகள் போன்றவற்றை சுட்டிக்காட்டி பெண்களுக்கு சமமான வாய்ப்புகளை மறுப்பதா என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 10 முதல் 14 ஆண்டுகள் என்ற வரம்பைத் தளர்த்தி ராணுவத்தில் ஓய்வு வயது வரை பணியாற்ற பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் சந்திரசூட், அஜய் அமர்வு இத்தகைய பாலின பாகுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசுக்கு மன மாற்றம் ஏற்படவேண்டும் என கூறியுள்ளனர்.
ராணுவத்தில் பாலின பாகுபாடு ஒழித்துக்கட்டும் இந்த அதிரடி தீர்ப்பை மூன்று மாதங்களில் செயல்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.