மேம்பாலத்தில் இருந்து 50அடி பள்ளத்தில் விழுந்த கார்
தெலுங்கானா மாநிலத்தில் மேம்பாலத்தில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சுமார் 50 அடி பள்ளத்தில் கார் விழுந்து நொருங்கியதில் கார் ஓட்டுநர் மற்றும் அதனை மீட்க சென்ற காவலர் என இருவர் உயிரிழந்தனர்.
கரீம் நகரை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்பவர் தனது மனைவி சுபரூபாவுடன் அலகனூர் மேம்பாலம் வழியாக காரில் சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஸ்ரீனிவாஸ் உயிரிழந்த நிலையில் அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த கரீம் நகர் காவல் நிலையத்தில் இருந்த காவலர் ஒருவர் பாலத்தில் இருந்து கயிறு கட்டி கீழே இறங்கியபோது திடீரென்று கயிறு அறுந்து கீழே விழுந்தார். பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




