14 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாய் கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாய், கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருப்பதை தெரிந்து மகனும், மகளும் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்ற நிகழ்ச்சி சம்பவம் நடைபெற்றது.

 

செங்கம் தாலுக்கா பொன்னன் கொள்ளை சேர்ந்த ஜான்சன் என்பவரின் மனைவி மேரி. 14 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூருக்கு ரயிலில் சென்றபோது காணாமல் போனார். அந்த கவலையில் இருந்த ஜான்சனும் அடுத்த ஆண்டில் காலமானார். லூர்து மேரி இறந்திருக்கலாம் என கருதி தேடும் பணியில் மகள் குழந்தை இயேசுவும், ஞான அந்தோணி உள்ளிட்ட இரண்டு மகள்களும் கைவிட்டனர்.

 

இந்த நிலையில் ரயிலில் மங்களூர் வந்த லூர்து மேரி கன்னட மொழி தெரியாததால் சமூக தொண்டு நிறுவனத்தில் இறங்கியிருந்தார். அந்த தகவல் வெளிநாட்டு பயணி ஒருவர் மூலம் தற்போது கிடைக்க லூர்து மேரி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.


Leave a Reply