குல்பி ஐஸில் பிளேடு : அதை வாங்கி ருசித்த இளம்பெண் அதிர்ச்சி
கர்நாடக மாநிலத்தில் குல்பி ஐஸ்சில் பிளேடு இருந்ததால் அதை வாங்கி ருசித்த இளம் பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். குடகு மாவட்டம் அவந்தூர் கிராமத்தை சேர்ந்த ரம்யா என்பவர் அதே பகுதியில் உள்ள ஐஸ்கிரீம் கடை ஒன்றில் இருந்து குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

அப்போது குல்பி ஐஸ்சில் பிளேடு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். குடகு மாவட்டத்தில் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து அங்குள்ள சிறுகடைகளுக்கு குல்பி ஐஸ் வினியோகம் செய்யப்படுகின்றன. அவ்வாறு தயாரித்து அனுப்பப்பட்ட குல்பியில் பிளேடு இருந்தது தெரியவந்தது. இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




