--- --:--:-- --

நடிகர் விஜயை புகழ்ந்து போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி

4

புதுக்கோட்டையில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக அதிமுக நிர்வாகி ஒருவர் நகரம் முழுவதும் சுவரொட்டி ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் அதிமுகவில் 28 ஆவது வட்ட செயலாளராக இருப்பவர் ஸ்டாலின் மாஸ்கோ.

 

விஜய்யின் தீவிர ரசிகரான இவர் தனது படத்தையும், விஜய்யின் படத்தையும் வைத்து நகரம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளார். அதில் விஜய் என்றும் ரசிகர்களுக்கு மாஸ்டர் என்றும் அவரை உங்களுக்கு ஹெட்மாஸ்டர் ஆகி விடாதீர்கள் என்றும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. 2011 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்ட விழா ஸ்டாலின் தலைமையில் தான் நடந்தது.

 

விஜய் மக்கள் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளராக இருந்த ஸ்டாலின் மாஸ்கோ தற்போது அதில் எந்த பொறுப்பிலும் இல்லை. இவ்வாறான சூழலில் விஜய் மீதான தனது தீவிர அபிமானத்தை சுவரொட்டியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon