--- --:--:-- --

தமிழகத்தில் விரைவில் உயர்கிறது மின் கட்டணம்

3

தமிழகத்தில் விரைவில் மின் கட்டணம் உயரும் என தகவல் வெளியாகியுள்ளது, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மூலம் தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் ஒழுங்குபடுத்தப்படுகிறது ஆண்டுதோறும் மின்சார கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக மின் கட்டணங்கள் உயர்த்தப்படாமல் உள்ளன.

 

இதனால் தமிழக அரசிடம் இருந்து அதிகளவு மானியத்தை எதிர்பார்க்கும் நிலைக்கு மின்சார வாரியம் தள்ளப்பட்டுள்ளது. எனவே மின் கட்டண உயர்வு குறித்த வரைவு பட்டியலை தயாரிக்க வேண்டும் என மின்சார வாரியத்திற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

மின்சார வாரியம் அளிக்கும் வரைவு அறிக்கையை பொறுத்து தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon