--- --:--:-- --

பிகில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம்

2

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.பிகில் படம் வருமானம் தொடர்பாக வருமான வரித்துறையினர் நடிகர் விஜய் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோரம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் இல்லத்தில் சோதனை மேற்கொண்டனர்.

 

4 நாள்கள் நடைபெற்ற சோதனையில் அன்பு செழியனுக்கு சொந்தமான இடங்கள் 77 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய், அன்புச்செழியன் கல்பாத்தி அகோரம் ஆகியோர் நேரில் ஆஜராக வருமானவரித்துறையினர் சம்மன் அளித்தனர்.

 

நேற்று விஜய் மற்றும் அன்புச்செழியன் ஆடிட்டர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர், இன்று ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும் கல்பாத்தி அகோரத்தின் மகளுமான அர்ச்சனா நேரில் ஆஜரானார்.

 

அப்போது பிகில் படத்திற்கான செலவு படப்பிடிப்பு எத்தனை நாட்கள் நடத்தப்பட்டது அதன் வசூல் விவரம் குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon